குரு தட்சணை


தாயின் கருவறை
போன்றது வகுப்பறை....
ஆகையால்தான் 
40குழந்தைகளுக்கு
தாயாகும் பாக்கியம்
ஆசிரியருக்கு மட்டுமே
கிட்டுகிறது..

ஒருவன் மேதையாவதும்
பேதையாவதும்
குருவின் போதனையிலே
உள்ளது...

பருவம்பார்த்து
விதைக்கும் விவசாயி
உரிய நேரத்தில் பயிரை
அறுவடை செய்கிறான்...
 
மாணவப்பருவம் பார்த்து
நற்சிந்தனைகள் எனும்
விதை விதைத்தால்
சாதனைகள் எனும் பயிரை
அறுவடை செய்யலாம்....

நாட்டின் எதிர்காலம்
இளைஞர்களிடம்
உள்ளதென்றால்
அதை திட்டமிட்ட பாதையில்
வழிநடத்திச் செலுத்தவல்லவர்
ஆசிரியரே....

உயரத்தை எட்டிவிட்டோம்
என்பதற்காக
விமானம் நின்றுவிடுவதில்லை...
ஓய்வு பெற்றபின்னரும்கூட
போதிக்க மறு(ற)ப்பதில்லை
நல்லாசிரியர்கள்...

சுடரின் அளவிற்கேற்ப
அதனைச் சுற்றிய
இருளும் விலகுகிறது...
ஆசிரியரின்
அறிவுச்சுடரின் அளவிற்கேற்ப
அறியாமையெனும் இருள்விலகுகிறது...

நேரம் தவறாமை
போதிக்க மறவாமை
ஒரு சார்பு பாராமை
ஆசிரியர்களின் நற்குணங்கள்...

இப்படிப்பட்ட
ஆசிரியர்களுக்கு
குரு தட்சணையாக
இன்னுயிரை கொடுத்ததேணும்
மதித்து காப்போம்...


பெண்ணிற்கு
பாதுகாப்பான இடமென்றால்
அது தாயின் கருவறை...
அதற்கு இணையான
வகுப்பறையில்கூட
சிலசமயம் நடக்கிறது
பாலியல் வன்கொடுமை...

தன் குழந்தைகள்போல்
உணர்ந்து போதிக்காமல்
மறந்து போகின்றனர்....

ஆசிரியர் வேடம்தரித்து
முளைத்துள்ள களைகளை
களைந்தெரிந்திடுவோம்..

இப்படிப்பட்ட
சிறியவர்களை
இன்னுயிரை கொடுத்தேனும்
மிதித்து ஒழிப்போம்...

Comments